
எண்ட்ரொயிட் கருவிகளில் எப்ஸ் பற்றி அறிந்திருப்பீர்கள். இது நாம் பயன் படுத்தும்எப்லிகேசன்களைக் குறிக்கின்றன. அதே எப்ஸ் எனும் டேபின் பக்கத்தில் விட்ஜட்ஸ் எனும் பெயரிலும் ஓர் டேப் இருப்பதை அவதானித்திருப்பீர்கள். எனினும் இதனைநீங்கள் மிக அரிதாகவே பயன் படுத்தியிருப்பீர்கள்.
உதாரணமாகவாநிலை தகவல்கலைச் சொல்லும் weather விட்ஜட், நாம் வழங்கியுள்ளநகரின் வானிலை பற்றிய தகவல்கலை அவ்வப்போது அப்டேட் செய்துகொண்டேயிருக்கும். நாம் விஜட்டைத் திறக்கும் நேரத்துக்குரிய சரியான வாநிலைஅறிவித்தலை அது காண்பிக்கும். அதே போன்று கலண்டர் விட்ஜட் எமது அன்றைய / அப்போதைய நிகழ்வுகள் பற்றிய விவரங்களை எமக்கு நினைவூட்டும்.
சில விட்ஜட்டுகள் எண்ட்ரொயிட் கருவியுடன் இணைந்தே வரும். நாம் பயன் படுத்தும்சில அப்லிகேசன்களுக்கான விஜட்டுகளும் உள்ளன அவை ப்லே ஸ்டோரிலிருந்துஅப்லிகேசன்களை நிறுவும் போது எமக்குத் தெரியாமலேயே நிறுவப்பட்டு விடும்.
இந்த விட்ஜட்டுகளை எண்ட்ரொயிட் கருவியின் ஹோம் திரையில் நிறுத்தவும் முடியும்.அதற்கு ஒரு விட்ஜட் ஐக்கன் மீது விரலால் அழுத்திக் கொண்டிருக்க வேண்டும். அப்போது அதனை நகர்த்தக் கூடியவாறு மேலெழுந்து வருவதோடு ஹோம்திரையையும் காண்பிக்கும். ஹோம் திரையில் விட்ஜட் ஐக்கனை விரும்பிய இடத்தில்விட்டு விரலை தொடுகையிலிருந்து எடுக்க வேண்டும். சில வேளை ஹோம் திரையில்இடமில்லாத போது No room on this home screen எனும் செய்தியைக் காண்பிக்கும். அப்போது அந்த விஜட்டை இடப்புறமாகவோ அல்லது வலப்புறமாகவோ நகர்த்துவதன்மூலம் நிறுத்தி விடமுடியும்.
அனூப்