Home / General / What is WYSIWYG ?

What is WYSIWYG ?

WYSIWYG என்றால் என்ன?
WYSIWYG  என்பது What You See Is What You Get என்பதன் சுருக்கமான வடிவமாகும். இது விசிவிக் என உச்சரிக்கப்படும். ஒரு மென்பொருளை விருத்தி செய்யும் போதே அதன் வருவிளைவு எவ்வாறிருக்கும் என்பதைக் காட்டுவதையே விசிவிக் குறித்து நிற்கிறது. உதாரணமாக போட்டோசொப் அப்லிகேசன் ஒரு விசிவிக் மென்பொருள் எனலாம். ஏனெனில் போட்டொசொப் மென்பொருளில் ஒரு படத்தை எடிட் செய்யும் போதே அதன் அச்சுப் பிரதி எவ்வாறு தோன்றும் என்பதை அறிந்து கொள்ளலாம்,.
எனினும் தற்போது விசிவிக் எனும் சொல் இணைய தளங்களை வடிவமைக்கப் பயன்படும் அனேகமான அப்லிகேசன்களையே குறித்து நிற்கின்றது. இம்மென்பொருள்கள் விசிவிக் எடிட்டர் எனவும் அழைக்கப்படுகின்றன. இந்த விசிவிக் எடிட்டர்கள் ஒரு இணைய தளத்தை வடிவமைக்கும் போதே அது  இணைய உலாவியில் எவ்வாறு தோற்ற மளிக்கும் என்பதைக் காட்டுகின்றன. இவ்வசதியின் மூலம் இணையத்தில் பதிவிடு முன்னரே  ஒரு படத்தையோ உரைப்பகுதியையோ இணைய பக்கமொன்றில் பொருத்தமான இடத்தில் நிலை நிறுத்தலாம். எனினும் இண்டர்நெட் எக்ஸ்ப்லோரர், க்ரோம், பயபொக்ஸ் போன்ற வெவ்வேறு இணைய உலாவிகளில் ஒரு இணைய தளம் ஒரே மாதிரி தோற்ற மளிக்கும் என்பதை உறுதியாகக் கூற முடியாவிட்டாலும் ஓரளவுக்குக் கிட்டிய தோற்றத்தை இந்த விசிவிக் எடிட்டர்கள்  காண்பிக்கின்றன. . அனூப்

About Imthiyas Anoof

Check Also

Steps Recorder-Windows 10

Steps Recorder-Windows 10 விண்டோஸ் 10 இல்  ஸ்டெப்ஸ் ரெக்கார்டர் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது? ஸ்டெப்ஸ் ரெக்கார்டர் என்பது உங்கள் கம்பியூட்டரில் …

Leave a Reply