Home / TechNews / Whatsapp introduces QR codes to add new contacts

Whatsapp introduces QR codes to add new contacts

Whatsapp introduces QR codes to add new contacts டுத்த சில வாரங்களில் சில புதிய அம்சங்களை வெளியிட இருக்கிறது வாட்சப். புதிய தொடர்பு இலக்கங்களைச்  (contacts) சேர்ப்பதை எளிதாக்குவதற்கு வாட்ஸ்அப் புதிய கியூஆர் குறியீடு QR code வசதியை அறிமுகப்படுத்துகிறது. மற்றொரு வாட்சப் பயனரைச் தொலைபேசி தொடர்பாளர் பட்டியலில்  சேர்க்க வேண்டுமானால் இனி தொலைபேசி எண்ணை தட்டச்சு செய்யாமலேயே அவரின்  QR குறியீட்டை ஸ்கேன் செய்து  விரைவாக சேர்த்து விடலாம்.  

WhatsApp Group Ethics
WhatsApp Group Ethics

வீடியோ அழைப்புகளில்  ஒருவரது  படத்தின் மீது நீண்ட அழுத்தத்தைப் பிரயோகித்து  பங்கேற்பாளர் ஒருவரின்  வீடியோவை இனி முழுமையான திரையில் (full screen) பார்க்க  முடியும். அதேபோல் வீடியோ ஐகானில் ஒரே ஒரு தடவை  தட்டுவதன்  மூலம் வீடியோ குழு அழைப்பை எளிதாக ஆரம்பிக்கலாம். வீடியோ கான்பரன்சிங்  அழைப்புகளில், இப்போது எட்டு பேரை ஆதரிக்கிறது வாட்சப் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.

புதிய அனிமேஷன் ஸ்டிக்கர் பொதிகளையும் சேர்க்கிறது வாட்ஸ்அப். மேலும் பிரவுஸரின் மூலம் பயன் படுத்தும் வாட்சப் வெப் (whatsapp web)  மற்றும் டெஸ்க்டாப் பயன் பாடுகளில் (desktop application) இருண்ட பயன்முறையைபயும் (dark mode) அறிமுகப்படுத்துகிறது.  

உலகெங்கிலும் உள்ள இரண்டு பில்லியன் பயனர்களுக்கு நம்பகமான, தனிப்பட்ட தொடர்பாடல் வசதியினை வழங்குவதிலேயே முக்கிய கவனம் செலுத்தி வருவதாக  வாட்ஸ்அப்ஸ் நிர்வாகம்  கூறுகிறது.

tamiltech.lk

[elementor-template id=”3695″]

About admin

Check Also

WhatsApp’s privacy update, August 2022

வாட்சப்பின் – Whatsapp சமீபத்திய அப்டேட்டில் பல தனியுரிமை சார்ந்த வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நீங்கள் அங்கம் வகிக்கும் வாட்சப் குரூப்பிலிருந்து …

Leave a Reply