Home / TechNews / WHATSAPP PAY -யைஅறிமுகப்படுத்தியது ஃபேஸ்புக்
whatsapp-pay

WHATSAPP PAY -யைஅறிமுகப்படுத்தியது ஃபேஸ்புக்

பேஸ்புக் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி (CEO-Chief Executive officer) மார்க் ஷக்கர்பெர்க் இன்று (June 15, 2020) முதன் முதலாக பிரேசில் நாட்டில் வாட்சப்-பே WHATSAPP PAY எனும் கட்டணம் செலுத்தும் வசதியை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளார்

இனி  பிரேசிலில் நாட்டில் உள்ள  வாட்ஸப் பயனர்கள்,  தமது வாட்ஸப்  செயலியைப் பயன் படுத்தி தனிநபர்கள் மற்றும்  உள்ளூர் வணிகங்களுக்கு  புகைப்படம் மற்றும் வீடியோ அனுப்புவது போல் பணத்தையும்  அனுப்பமுடியும்.  பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கும் கூட   தமது வாட்ஸப்  செயலியைப் பயன் படுத்தலாம்.

WHATSAPP PAY

இந்த வசதி மூலம்  டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை கையோடு எடுத்துச் செல்ல மறந்தாலும்   உங்கள் மொபைலிலுள்ள வாட்ஸப் செயலியினூடாகாவே எந்த இடத்திலும் பணம்  செலுத்த வேண்டிய தேவைகளுக்குப் பயன் படுத்தலாம்.

வாட்ஸ்ஸப்பில் கட்டணம் செலுத்தும் முறைக்கு Facebook Pay சேவையை  பயன் படுத்தப்படுகிறது ஃபேஸ்புக்.   ஃபேஸ்புக்கில் சேமிக்கப்படும் அதே தகவலை ஃபேஸ்புக்கின் Marketplace   மார்க்கெட்-ப்ளேஸ் (இது கூட இன்னும் ப்பரவலாக பயன் பாட்டிற்க்கு வரவில்லை) தளத்தில்  பொருட்களை வாங்கவும், வாட்ஸ்ஸப்  மெசேஜிங் சேவை வழியாக பணம் பரிமாற்றமும்  செய்யவும் பயன் படுத்தலாம். வாட்ஸ்ஸப் மெசேஜிங் சேவை ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமானது என்பது நீங்கள் ஏற்கனவே  அறிந்த விடயம்

வாட்ஸ்ஸப்-பே சேவை முதன் முதலாக இந்தியாவிலேயே ஆரம்பிக்கப்படுமென எதிர் பார்க்கப்பட்டது. ஏனெனில் இந்தியா வாட்ஸ்ஸப்பின் மிகப்பெரிய பிராந்திய சந்தையாக இருப்பதோடு பேஸ்புக் நிறுவனம் 2018 ஆம் ஆண்டிலேயே, இந்தியாவில் இந்த வாட்ஸ்ஸப் பே-யை  பரீட்சிக்க  ஆரம்பித்தது.   இந்திய அரசின் அனுமதியும் கூட வழங்கப்படிருக்கிறது.

இலங்கையில் இன்னும் வாட்ஸ்ஸப்-பே பயன் பாட்டுக்கு வராத நிலையில் இந்த செய்தி எமக்கு முக்கியமா எனக் கேட்டால் இல்லைதான். இது போன்ற முக்கியமேயில்லாதா செய்திகளையெல்லாம் வாசிப்பதிலேயே நாம் நேரத்தை வீணடிக்கிறோம்

பிரேசில் நாடிலும் 120 மில்லியனுக்கும் அதிகமான தனிநபர் பயனர்களை வாட்ஸ்ஸப் கொண்டுள்ளது, இது இந்தியாவை அடுத்து அதன் இரண்டாவது பெரிய சந்தையாகும்.

வாட்ஸ்சப்-பே சேவை விரைவில் படிப்படியாக  அனைத்து நாடுகளிலும் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர் பார்க்கலாம்

பிந்திய செய்தி

வாட்சப்-பே சேவையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடை நிறுத்தியுள்ளது பிரேசில் நாட்டு மத்திய வங்கி. (23.06.2020)

About admin

Check Also

WhatsApp’s privacy update, August 2022

வாட்சப்பின் – Whatsapp சமீபத்திய அப்டேட்டில் பல தனியுரிமை சார்ந்த வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நீங்கள் அங்கம் வகிக்கும் வாட்சப் குரூப்பிலிருந்து …

Leave a Reply