Home / General / WhatsApp rolls out Message Yourself feature

WhatsApp rolls out Message Yourself feature

நீங்களே உங்களுக்கு செய்திகளை அனுப்பக் கூடிய வசதியை வாட்சப் தற்போது அறிமுகம் செய்துள்ளது.

Message Yourself  எனும்  இந்த அம்சம் மூலம்  பயனர்கள் வாட்சப்பில் குறிப்புகள்-notes, படங்கள்-images நினைவூட்டல்கள்-reminders மற்றும் இணைப்புகள்-links  போன்றவற்றை  தங்களுக்கே அனுப்பி அவற்றை சேமித்து தேவையான போது பயன் படுத்திக்  கொள்ள முடியும்

இந்த அம்சத்தைப் பெற வாட்சப்பின் புதிய பதிப்பிற்கு அப்டேட் செய்து கொள்ள வேண்டும். 

வாட்சப் வெப் -இல் தற்போது இதனைப் பயன் படுத்த முடிவதோடு ஆண்ட்ராய்டு மற்றும் ஐஃபோன் பயனர்களுக்கு அடுத்த சில நாட்களில் இது கிடைக்க விருக்கிறது.   

 “Message Yourself” எனும் இந்த வசதியைப் பயன் படுத்துவதற்கு வாட்சப்பைத் திறந்து New  Chat   ஐக்கானில் தட்டுங்கள்.  

அப்போது தோன்றும் தொடர்புப் பட்டியலின் (contact)  மேல் பகுதியில் உங்கள் பெயரையும் காணலாம்.  

அடுத்து  உங்கள் பெயரில் தட்டி வழமை போல் செய்திகள் அனுப்ப ஆரம்பிக்க முடியும். 

About admin

Check Also

BlueStacks X-Play Android Games in Your Browser

BlueStacks X-Play Android Games in Your Browser PBlueStacks X-Play Android Games in Your Browser விண்டோஸில் …

Leave a Reply