Home / Android / WhatsApp to allow sharing high-quality videos

WhatsApp to allow sharing high-quality videos

WhatsApp to allow sharing high-quality videos அதிக தெளிவுத்திறன் high-resolution  கொண்ட வீடியோக்களைப் பகிர உங்களை அனுமதிக்கும் புதிய அம்சத்தை  வாட்சப் அறிமுகப்படுத்த இருக்கிறது. தற்போது, ​​வாட்சப் செயலி  உயர் தெளிவுத்திறன் கொண்ட வீடியோக்களை நீங்கள் பகிரும் போது அவற்றின் சுருக்கியே  அனுப்புகிறது. இதன் காரணமாக அனுப்பும் வீடியோக்களின் தெளிவுத் திறன் குறைந்து விடுகிறது.

வாட்சப்பில்  தரமான வீடியோக்களை பகிரும் தெரிவுகளைச் சேர்க்க நிறுவனம்  திட்டமிட்டுள்ளது.  அதன்படி வாட்ஸ்அப்பின் 2.21.14.6 இலக்கப் பதிப்பில் புதிய அம்சம் சேர்க்கப்படுகிறது.

ஆட்டோ (Auto), சிறந்த தரம் (Best Quality) மற்றும் டேட்டா சேவர் (Data Saver)  உள்ளிட்ட மூன்று தெரிவுகள் உங்களுக்குக் கிடைக்கும். ஆட்டோ எனும் முதல் தெரிவு அதன் பெயர் குறிப்பது போல்  குறிப்பிட்ட வீடியோக்களுக்கான சிறந்த சுருக்க வழிமுறையை வாட்சப் தானாகவே கண்டறியும்.

இரண்டாவது விருப்பத்தை நீங்கள் தேர்வுசெய்தால், வாட்சப்பில் எப்போதும் கிடைக்கக்கூடிய சிறந்த தரத்தில் வீடியோவை அனுப்பும்.

டேட்டா சேவர் விருப்பம் என்பது உங்கள் Android கருவி settings இல் டேட்டா சேவர் – data saver தெரிவு இயக்கப்பட்டிருந்தால், ​​வீடியோக்களை அனுப்பும் முன் வாட்சப் அவற்றை சுருக்கியே அனுப்பும்.

இந்தப் புதிய அம்சம் இன்னும் உருவாக்கத்தில் உள்ளது. வாட்சப்பின் அடுத்த புதுப்பிப்பில் இதை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

About admin

Check Also

Hoote-Voice Based Social Media App

Hoote-Voice Based Social Media App ஹூட் என்பது புதிதாக அறிமுகமாகியிருக்கும் உலகின் முதல் (?) குரல் அடிப்படையிலான சமூக …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *