Home / Video / WhatsApp Web Now Lets you Create Custom Stickers

WhatsApp Web Now Lets you Create Custom Stickers

WhatsApp Web Now Lets you Create Custom Stickers ஸ்டிக்கர்களை உருவாக்க அனுமதிக்கும் புதிய அம்சத்தைச் சேர்த்துள்ளது வாட்சப்

உங்கள் நண்பர்களுடனான அரட்டையில் இனி நீங்கள் விரும்பியபடி ஸ்டிக்கர்களை உருவாக்கிப் பகிர்ந்து கொள்ள முடியும்.

இப்போதைக்கு (நவம்பர் 26,2021), இப்புதிய அம்சம் வாட்சப் வெப் WhatsApp web app இல் மட்டுமே கிடைக்கிறது. அடுத்த வாரத்தில் WhatsApp இன் டெஸ்க்டாப் பதிப்பிலும் கிடைக்கும் என அறிவித்துள்ளது வாட்சப்

சில வேளை மொபைல் செயலியிலும் கிடைக்கலாம். ஆனால் அது பற்றிய அறிவிப்பை WhatsApp அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை.

வாட்சப் வலைச் செயலியைப் பயன்படுத்தி, தனிப்பயன் ஸ்டிக்கர்களை உருவாக்க உங்கள் கணினியில் உள்ள படங்களைப் பயன்படுத்தலாம்.

மேலும் இந்த ஸ்டிக்கர்களை மிக எளிதாக உருவாக்கவும் முடியும். கிராஃபிக் வடிவமைப்புத் திறன்கள் எதுவுமே இருக்க வேண்டியதில்லை.

இந்த அம்சத்தைப் பயன்படுத்த, கணினி பிரவுசரில் WhatsApp web க்குச் சென்று, காகித கிளிப் (paper clip) ஐகானைக் கிளிக் செய்யுங்கள்.

அங்கிருந்து, “ஸ்டிக்கர்” என்பதைக் கிளிக் செய்து, உங்கள் கம்பியூட்டரிலிருந்து ஒரு படத்தைத் தேர்ந்தெடுங்கள்.

அப்போது அந்தப் படத்தின் மேல் அதனை எடிட் செய்வதற்கான கருவிகள் தோன்றும். அங்கிருந்து, அப்படத்தில் இமோஜி, உரை மற்றும் பிற ஸ்டிக்கர்களை நுழைக்க முடியும். படத்தின் அளவையும் கூட மாற்ற முடியும்.

About admin

Check Also

How to insert a pen drive into a USB port?

யூ.எஸ்.பி போர்டில் ஒரு யூ.எஸ்.பி கேபிளையோ பெண்ட்ரைவையோ செருகும்போது ஒரே தடவையில் செருக முடியாமல் அதனைத் திரும்பத் திரும்ப இரண்டு …

Leave a Reply