Home / General / What to consider when changing file name – Tamil
when change file name
when change file name

What to consider when changing file name – Tamil

change-file-name  பைலின் பெயர் மாற்றம் (Rename) செய்த போது அந்த
hat to consider when changing the file name

when changing file name- சில நேரங்களில் உங்கள் கணினியில் ஒரு பைலின் பெயர் மாற்றம் (Rename) செய்த போது when changing file name அந்த பைலுக்குரிய ஐக்கன் வடிவம் மாற்றமுற்றதோடு பைலை உபயோகிக்க முடியாமல் போன அனுபவம் பலருக்கு ஏற்பட்டிருக்கும். இதற்குக் காரணம் பைல் பெயரை மாற்றும் போது அந்த பைலுக்குEய ( File Extension) எக்ஸ்டென்ஸனையும் வழங்காது விடுவதேயாகும்.

கணினியிருக்கும் ஒவ்வொரு பைலுக்கும் அது என்ன வகையான பைல் என்பதை அறிந்து கொள்ளக் கூடியவாறு மூன்று அல்லது நான்கு எழுத்துக்களைக் கொண்ட ஒரு சொல் ஒவ்வொரு பைல் பெயரின் இறுதியிலும் இணைந்திருக்கும். இதனையே பைல் எக்ஸ்டென்ஸன் எனப்படும். உதாரணமாக .doc, .ppt, .jpg, .txt, .mp3, .avi என ஏராளமான பைல் எக்ஸ்டென்ஸன்கள் கொண்ட பைல் வகைகள் உள்ளன. பைல் பெயரும், எக்ஸ்டென்ஸனும் ஒரு புள்ளி (டொட்)கொண்டு பிரிக்கப்படும். இந்த பைல் எக்ஸ்டென்ஸனை வைத்தே இயங்குதளமான ஒபரேடிங் சிஸ்டமானது அது எந்த வகையான பைல், அதனை எந்த மென்பொருள் கொண்டு திறக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்கிறது.

ஆனாலும் இயல்பு நிலையில் (Default setting) பைல் எக்ஸ்டென்ஸனானது மறைக்கப்பட்டே இருக்கும். பைல் எக்ஸ்டென்ஸன் மறைந்திருந்தாலும் அதனை விரும்பினால் தோன்றவும் செய்யலாம். பைல் எக்ஸ்டென்ஸன் தோன்றுகின்ற நிலையில் பைல் பெயரை மாற்றும்போது அதற்குரிய எக்ஸ்டென்சனையும் கட்டாயம் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்காதபோதே அந்த பைலை எம்மால் திறக்க முடியாமல் போகிறது.

பைல் எக்ஸ்டென்சனை மறைக்கவோ அல்லது தோன்றச் செய்யவோ நீங்கள் செய்ய வேண்டியது StartAll Programs  Accessories ஊடாகச் சென்று windows Explorer தெரிவு செய்யுங்கள். (அல்லது ஏதேனுமொரு போல்டரைத் திறந்து கொள்ளுங்கள்) அந்த விண்டோவில் Tools மெனுவில் Folder Options தெரிவு செய்யுங்கள். அப்போது தோன்றும் டயலொக் பொக்ஸில் View டேபின் கீழ் Hide Extension for known file types என்பதைத் தெரிவு நிலைக்கு மாற்றி விட்டு ஓகே க்ளிக் செய்யுங்கள். இப்போது பைல் எக்ஸ்டென்சன் அனைத்தும் மறைக்கப்பட்டு விடும்.

பைல் எக்ஸ்டென்ஸன் மறைக்கப்படாதபோதே மேற் சொன்ன சிக்கல் வருவதால் எப்போதும் பைல் எக்ஸ்டென்ஸனை மறைத்து வைப்பதே சிறந்தது.

About Imthiyas Anoof

Check Also

ஃபேஸ்புக் அறிவிப்புகள் மின்னஞ்சலிற்கு வருவதைத் தடுப்பது எப்படி?

Avoid Facebook notifications in Email ஃபேஸ்புக் சார்ந்த அனைத்து அறிவிப்புகளும் உங்கள் மின்னஞ்சலிற்கும் வந்து தொல்லை தருகிறதா?. அதனை …

Leave a Reply