![]() |
When you install APK files |
கூகில் ப்லே ஸ்டோரில் இல்லாத எண்ட்ரொயிட் அப்லிகேசன்களை வேறு தளங்களில் இருந்து டவுன்லோட் செய்து இலகுவாக எண்ட்ரொயிட் கருவியில் நிறுவிட முடியும். இந்த பைல்கள் .apk எனும் பைல் நீட்சியுடன் காணப்படும். இதனை விண்டோஸ் இயங்கு தளத்தின் .exe பைல் வகைக்கு ஒப்பிடலாம். இந்த .apk பைலை டவுன் லோட் செய்து எண்ட்ரொயிட் கருவியில் திறந்ததுமே நிறுவ ஆரம்பித்து விடும். எனினும் உங்கள் கருவியில் ஒரு சிறிய மாற்றத்தை நீங்கள் செய்ய வேண்டியிருக்கும். அதாவது மூன்றாம் தரப்பு நிறுவன அப்லிகேசன்களை நிறுவுவதற்கான ஒப்புதலை உங்கள் என்ரொயிட் கருவிக்கு வழங்க வேண்டும். அதற்கு உங்கள் கருவியில் Settings இல் தட்டி Applications என்பதில் “Unknown Sources” என்பதைத் தெரிவு செய்ய வேண்டும்.
அனூப்