Home / General / Where is “B” drive?

Where is “B” drive?

 “B”–  ட்ரைவ் எங்கே போச்சு?

விண்டோஸ் இயங்கு தளம் நிறுவப்பட்ட கணினியில் (மை) கம்பியூட்டர் திறந்து பாருங்கள். அப்போது தோன்றும் விண்டோவில் உங்கள் கணினியில்  பொருத்தப் பட்டுள்ள ஹாட் டிஸ்க் ட்ரைவ், ப்லொப்பி டிஸ்க் ட்ரைவ், சீடி/டீவிடி ரொம் ட்ரைட், பென் ட்ரைவ் என அனைத்து ட்ரைவ்களையும் அங்கு காண்பிக்கும். இந்வொவ்வொரு ட்ரைவ் பெயருக்கு முன்னால் ஒரு ஆங்கில எழுத்தும் குறிப்பிடப் பட்டிருக்கும். ப்லொப்பி ட்ரைவிற்கு எனும் எழுத்தும் ஹாட் டிஸ்க் பாட்டிசன்களுக்கு சி, டீ, ஈ தொடர்ச்சியாக ஒவ்வொரு ட்ரைவிற்கும் ஒரு எழுத்து  வழங்கப் பட்டிருப்பதைக் காணலாம்.  
ஆனால் அங்கு ஆங்கில பீ எழுத்தைக் காண முடியாது. பீ ட்ரைவ் என ஒன்று அங்கு இருக்கக் கூடாதா? இல்லை. இந்த பீ (B) எனும் எழுத்து மற்றுமொரு  ப்லொப்பி ட்ரைவை இணைப்பதற்கு வசதியாகவே ஒதுக்கப் பட்டுள்ளது. ஒரு காலத்தில் இரண்டு ப்லொப்பி ட்ரைவ்கள் ஒரே கணினியில் பொருத்திப் பயன் படுத்தப் பட்டன. தற்போது ப்லொப்பி ட்ரைவ்கள் பயன்பாட்டிலிருந்து  இல்லாமல் போனாலும் அவற்றிற்கென ஒதுக்கப் பட்ட அந்த எழுத்துக்கள் இன்னும் அவ்வாறே தொடர்கின்றன.  நீங்கள் விரும்பினால் அவற்றை மாற்றிக் கொள்ளக் கூடிய வசதியும் தரப்பட்டுள்ளது. 
-அனூப்- 

About Imthiyas Anoof

Check Also

BlueStacks X-Play Android Games in Your Browser

BlueStacks X-Play Android Games in Your Browser PBlueStacks X-Play Android Games in Your Browser விண்டோஸில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *