Home / TechNews / YouTube to Start Deducting Taxes From Creators Outside US

YouTube to Start Deducting Taxes From Creators Outside US

YouTube to Start Deducting Taxes From Creators Outside US அமெரிக்காவிற்கு வெளியே உள்ள யூடியூப் படைப்பாளர்களும் இனி புதிதாக  வரி

அனைத்து யூடியூப் வீடியோ  படைப்பாளர்களுக்கும்  கீழுள்ளது போன்ற மின்னஞ்சல்  வந்திருக்கும்.

YouTube to Start Deducting Taxes From Creators

இந்த மின்னஞ்சல் அமெரிக்காவிற்கு வெளியே பிற நாடுகளிலிலிருந்து  யூடியூப் சேனல்  நடாத்தும் அனைவரிடமிருந்தும் புதிதாக  வரி அறவிட இருப்பதாகச் சொல்கிறது.  அதாவது உங்கள் யூடியூப் வருவாயிலிருந்து சிறிய தொகையை வரியாக கழிக்கப்படவிருக்கிறது.

நீங்கள் அமெரிக்காவிற்கு வெளியே  வேறொரு நாட்டிலிருந்து செயற்படுபவர்  என்றால், நீங்கள் அமெரிக்காவிலிருந்து சம்பாதிக்கும் வருவாய்க்கு மட்டுமே வரி செலுத்த வேண்டும்.

அதாவது அமெரிக்காவிலிருந்து உங்கள் வீடியோவை யாரும் பார்வையிட்டால்  வரும் வியூஸிற்கு நீங்கள் வரி செலுத்த வேண்டும். அந்த வரி வீதம் அதிகபட்சமாக 1% முதல் 30% வரை இருக்கும்.  

எனவே அடுத்த சில வாரங்களுக்குள் உங்கள் அமெரிக்க வருவாய்   விவரங்களை அனுப்புமாறு  அறிவுறுத்துகிறது யூடூப் .

அந்த  விவரங்களை வழங்கா விட்டால்,  உங்கள் அமெரிக்க வருவாயில்  இருந்து  வரியானது  24% வரை வழங்க வேண்டிவரலாம் என்கிறது அந்த மின்னஞ்சல் குறிப்பு.

இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்காவிற்கு வெளியே உள்ள படைப்பாளர்களிடமிருந்து அமெரிக்கா அறவிடப்படுமென என்று இந்த மின்னஞ்சல் கூறுகிறது.

எனினும்  இலங்கையர்கள் இதைப் பற்றி அதிகம் கவலைப் படத் தேவையில்லை. ஏனெனில் அமெரிக்க வரி அமெரிக்க அளவுகோலுக்கு மட்டுமே பொருந்தும்,

பொதுவாக இலங்கையிலிருந்து நடாத்தப்படும் யூடியூப் சேனல்களுக்கு அமெரிக்காவிலிருந்து வரும் வியூஸ்களில் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கும்.  

இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் வரி ஒப்பந்தம் ஏதும் இல்லை என்றால், வரி வீதம் 0% ஆகக்கூட அமையலாம்.

ஆனால் தேவையான வரி விவரங்களை அனுப்பாவிட்டல், மொத்த யூடியூப்  வருவாயில் 24%  WHT (With Hooding Tax) நிறுத்திவைக்கும் வரியாக கட்டாயம் அறவிடும்.

எனவே இப்போது மொனடைஸ் செய்யப்பட்டு யூடியூபிலிருந்து வருமானம் பெறும் அனைவரும் அமெரிக்க வரி விவரங்களுடன் உங்கள் AdSense கணக்கை 2021 மே மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் அப்டேட் செய்யுமாறு யூடியூப் பரிந்துரைக்கிறது.

கேட்ஜட்ஸ் 360

About admin

Check Also

WhatsApp’s privacy update, August 2022

வாட்சப்பின் – Whatsapp சமீபத்திய அப்டேட்டில் பல தனியுரிமை சார்ந்த வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நீங்கள் அங்கம் வகிக்கும் வாட்சப் குரூப்பிலிருந்து …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *