What are Zip Files? இணைய பயனர்களுக்கு ஷிப்-ஃபைல் (zip) என்பதுஒரு பரிச்சயமான ஃபைல் வகையாகும். ஷிப் ஃபைல் என்பது சுருக்கப்பட்ட (compressed file) ஃபைல் என்பதைக் குறிக்கிறது. உதாரணமாக நீங்கள் ஒரு ஃபைலை டவுன்லோட் செய்யும் போது அந்த ஃபைலின் பெயர்ப் “filename.zip,” என இருந்தால அது ஒரு ஷிப் ஃபைல் எனப்படும்.
ஷிப் செய்வது என்பது ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பைல்களை ஒரு சிறு ஃபைலாக மாற்றுவதாகும். ஒரு ஷிப் ஃபைல் ஹாட் டிஸ்கில் குறைந்தளவு இடத்தையே பிடித்துக் கொள்வதோடு அதனை வேறொரு கணினிக்கோஅல்லது பென் ட்ரைவிற்கோ மிகவேகமாக மாற்றிக் கொள்ளலாம். இதன் காரணமாகவே இணையத்தில் நீங்கள் டவுன்லோட் செய்யும் அனேகமான ஃபைல்கள் ஷிப் ஃபைல்களாகக்கிடைக்கின்றன. What are Zip Files?
ஒரு ஷிப், ஃபைலை பயன்படுத்துவதற்கு அதனை முதலில் அன்ஷிப்(unzip) செய்தல் வேண்டும். அதவது சுருக்கப்பட்ட அந்த ஃபைலை விரிவடையச் செய்தல் வேண்டும். WinZip, WinRar என்பன அன்ஷிப் செய்வதற்கான சில பிரபலமான மென்பொருள் கருவிகளாகும். இந்த மென்பொருள் கருவிகள் இணையத்தில் இலவசமாகவே கிடைக்கின்றன. -அனூப்-
